6 April, 2024
0 Comments
1 category
மணிமேகலை
அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான்
விழாவறை காதை
மணிமேகலை
- தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
- காதைகள் – 30
- முதல் காதை – விழாவிறைக்காதை ; இறுதிக் காதை – பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
- வரிகள் – 4755
- சமயம் – பௌத்தம்
- ஐம்பெரும்காப்பியங்களுள் ஓன்று.
- கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக பிறந்த மணிமேகலையின் துறவு வாழ்க்கையை கூறும் நூல்.
- காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியம்.
- பெண்ணின் பெயரால் அமைந்த முதற்காப்பியம்
- பெண்ணின் பெருமையை பேசும் நூல்.
- சமய பூசலுக்கு வித்திட்ட நூல், துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்.
- தமிழின் முதல் சமயக்காப்பியம்
வேறு பெயர்கள்:
- இரட்டை காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- சீர்திருத்தக் காப்பியம்
- மணிமேகலைத் துறவு
- பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
- அறகாப்பியம்
- கதை களஞ்சியக் காப்பியம்
ஆசிரியர் குறிப்பு:
- மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- ஊர்: திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
- காலம் – கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
- சிறப்புப் பெயர்கள்: “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்”
மணிமேகலை:
- கோவலன் மாதவியின் மகள் – மணிமேகலை
- மனிமேகலை பிறந்த ஊர் – பூம்புகார்
- மணிமேகலை மறைந்த ஊர் – காஞ்சிபுரம்
- மணிமேகலையை விரும்பிய அரசன் – உதயகுமாரன்
- மணிமேகலையின் தோழி – சுதமதி
- மாதவியின் தோழி – வயந்த மாலை
- புத்த சமய ஆண்துறவி – அறவண அடிகள்
- மணிமேகலைத் தெய்வம் கொண்டு சென்ற தீவு – மணிபல்லவம்
- மணிமேகலா தெய்வம் அளித்த வரங்கள் – 3
- பசியற்றிருக்கவும்,
- விரும்பும் உருவம் எடுக்கவும்,
- வான்வழிச் செல்லவும்
அமுதசுரபி பெற உதவியது – தீவதிலகை
அமுதசுரபி முற்பிறவியில் இருந்தது – ஆபுத்திரனிடம்
மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் – ஆதிரை (அறவனடிகள் அறிவுரைப்படி)
மணிமேகலை முதன் முதலில் பசிநோயை போக்கியது – காயசண்டிகையின் பசிநோயை
மணிமேகலை தன உருவத்தை மாற்றிக்கொண்டது – காயசண்டிகைப் போன்று.
Tags: 9th new book9th std new and old book 9th std new book with previous year question 9th std tamil with previous year questions Manimegalai Tnpsc Group IV tamil notes மணிமேகலை
Category: Tamil 9th new and old