9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை

அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான்

விழாவறை காதை

மணிமேகலை

  • தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
  • காதைகள் – 30
  • முதல் காதை – விழாவிறைக்காதை ; இறுதிக் காதை – பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
  • வரிகள் – 4755
  • சமயம் – பௌத்தம்
  • ஐம்பெரும்காப்பியங்களுள் ஓன்று.
  • கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக பிறந்த மணிமேகலையின் துறவு வாழ்க்கையை கூறும் நூல்.
  • காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியம்.
  • பெண்ணின் பெயரால் அமைந்த முதற்காப்பியம்
  • பெண்ணின் பெருமையை பேசும் நூல்.
  • சமய பூசலுக்கு வித்திட்ட நூல், துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்.
  •  தமிழின் முதல் சமயக்காப்பியம்

வேறு பெயர்கள்:

  • இரட்டை காப்பியம்
  • புரட்சிக் காப்பியம்
  • சீர்திருத்தக் காப்பியம்
  • மணிமேகலைத் துறவு
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • அறகாப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்

ஆசிரியர் குறிப்பு:

  • மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • ஊர்: திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
  • காலம் – கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
  • சிறப்புப் பெயர்கள்:  “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்”

மணிமேகலை

  • கோவலன் மாதவியின் மகள்  –  மணிமேகலை
  • மனிமேகலை பிறந்த ஊர்  –  பூம்புகார்
  • மணிமேகலை மறைந்த ஊர்  –  காஞ்சிபுரம்
  • மணிமேகலையை விரும்பிய அரசன்   –  உதயகுமாரன்
  • மணிமேகலையின் தோழி  –  சுதமதி
  • மாதவியின் தோழி – வயந்த மாலை
  • புத்த சமய ஆண்துறவி  –  அறவண அடிகள்
  • மணிமேகலைத் தெய்வம் கொண்டு சென்ற தீவு  –  மணிபல்லவம்
  • மணிமேகலா தெய்வம் அளித்த வரங்கள்  –  3
  1. பசியற்றிருக்கவும்,
  2. விரும்பும் உருவம் எடுக்கவும்,
  3. வான்வழிச் செல்லவும்

அமுதசுரபி பெற உதவியது  –  தீவதிலகை

அமுதசுரபி முற்பிறவியில் இருந்தது  –  ஆபுத்திரனிடம்

மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் – ஆதிரை (அறவனடிகள் அறிவுரைப்படி)

மணிமேகலை முதன் முதலில் பசிநோயை போக்கியது  –  காயசண்டிகையின் பசிநோயை

மணிமேகலை தன உருவத்தை மாற்றிக்கொண்டது  –  காயசண்டிகைப் போன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th new and old book வளரும் செல்வம்

0 Comments

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். இம்மொழியின்…

திராவிட மொழிக்குடும்பம்

3 Comments

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்ப்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். இந்தோ…