9th std TNPSC notes/ ஏறு தழுவுதல்/ yeruthaluvuthal

0 Comments

ஏறு தழுவுதல்

  • சங்க இலக்கியமான கலித்தொகையில்ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு,  அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,  மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும் மள்ளர் வனப்பு ஒத்தனகலித்தொகை

  • சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  • எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.
  • எருது பொருதார் கல் சேலம் மாவட்டத்தில் உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு
  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் உள்ளது.
  • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் உள்ளது.
  • தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு  திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
  • சிந்து வெளி அகழாய்வுகளில் கண்டறி யப்பட்ட மாடு  தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

ஏறு தழுவுதல்

  • முல்லை நிலத்து மக்களின் – அடையாளத்தோடும்
  • மருத நிலத்து மக்களின்– வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும்
  • பாலை நிலத்து மக்களின்–  போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது

இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டுஅடையாளமாக நீட்சி அடைந்தது.

ஏறு தழுவுதலின், வெவ்வேறு பெயர்கள் -;

மாடு பிடித்தல் ‘ மாடு அணைதல் மாடு விடுதல் மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல் சல்லிக்கட்டு

சல்லி என்பது மாட்டின் கழுத்தில்  கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும் (புளியங்கொம்பினால் செய்யப்பட்டது).

அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி நாணயங்களை, துணியில்  முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்தது.

காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்டிருக்கும் நாடு – ஸ்பெயின்

  • அங்கு காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான்.
  • அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
  • சில நாட்டு விளையாட்டுகளில் காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும்  ஆட்டத்தின் முடிவில் அந்ததக் காளை கொல்லப்படுதலும் உண்டு. 
  • மேலைநாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத் தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
  • தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான் விழாவறை…