- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
- உலகச்சுற்றுச் சூழல் நாள் – ஜூன்5
மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” – மாங்குடி மருதனார்
- பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர். கம்மாய் என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்.
- மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறைக்கிணறு
- மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு – ஊருணி
- கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 முதல் 18 அடியாகவும் இருக்கிறது.
- உணவெனப்படுவது நிலத்தொடு நீரே – புறநானூறு
சர் ஆர்தர் காட்டன்.
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன். பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்
1829இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப்பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.
கல்லணைக்கு இவர் சூட்டிய பெயர் கிராண்ட் அணைக்கட் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
தொ.பரமசிவன்
நீரும் நீரா டலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் பேராசிரியர் தொ.பரமசிவன்
குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரியவெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும். குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று என்பது அவரது விளக்கம்
“குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார்” ஆண்டாள்.
தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.
திருமணம் முடிந்ததபின் அதன் தொடர்ச்சியாய்க் கடலாடுதல் என்பதை மேற்கொள்ளும் வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது.
சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு.
இராஜஸ்தான் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே 700 அடிவரை ஆழ்குழாய்கள் இறக்கியும் நீர் கிட்டவில்லை.
ஜான் பென்னி குவிக்
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.
கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்தபோது தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடித்தார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் தம் குழந்தைகளுக்குப் பென்னி குவிக் எனப் பெயர் சூட்டும் வழக்கம் இன்றும் உள்ளது
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்
மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் – மணவை முஸ்தபா
தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கா ன தமிழ் – என். சொக்கன்