9th new and old book notes for group IV/புறநானூறு

0 Comments

புறப்பொருள் பற்றிய 400 பாடல்களால் ஆன நூல்.

  • புறம், புறப்பாட்டு, என்றும் வழங்கப்படும்.
  • கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • 4 அடி சிற்றெல்லை 40 அடி பேரெல்லை.
  • 157 புலவர்கள் பாடிய உள்ளனர்.
  • இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். 
  • இதன் பாடல்களுள் மிகச்சிறந்தனவாக கருதப்படுகின்ற 55 பாடல்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு புறப்பாட்டுரை என்று வெளியிடப்பட்டுள்ளன.
  • இப்புறப்பாட்டுரையை 1976 இல் முதன் முதலில் பதிப்பித்தவர் இரா. தெய்வசிகாமணி ஆவார்.
  • அக்கால மக்களின் அரசியல், சமுதாய நிலை, கல்வி, நாகரீகம், கலை, வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை அணிகலன், பழக்கவழக்கங்கள், வாணிபம், ஆகிய பலவற்றை அறிய உதவும் ஒரு இலக்கியப் பேழையாக புறநானூறு திகழ்கின்றது.

10 வகை ஆடைகளையும்,

28 வகை அணிகலன்களையும் 

30  வகை படைக்கல கருவிகளையும் 

67 வகை உணவுகளையும் எடுத்தியம்புகிறது

  • இந்நூல் தமிழர் வாழ்வின் உயர்வை காட்டும் கண்ணாடி.
  • புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.

இந்நூலில் சில பாடல்களை ஜி. யு .போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்

முக்கிய மேற்கோள்கள்

  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குடபுலவியனார்
  • உறுமிடத்  துதவா  துவர்நிலம் – பரணர்
  • உண்பது நாழி உடுப்பது இரண்டே – நக்கீரர்
  • செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்…..வறிது நிலைஇய காயமு மென்றிவை…–உறையூர் முதுகண்ணன்
  • செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே ,- நக்கீரர்
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்
  • சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.-பொன் முடியார்
  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே !-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  • ஈயென இறத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயோன் என்றல் அதனினும் இழிந்தன்று – கழைதின் யானையார் வல்வில் ஓரியை பாடியது
  • நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்
  • நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் – நரி வெருஉ தலையார்
  • வளி மிகின் வலி இல்லை – ஐயூர் முடவனார்

11th Std Tamil புறநானூறு

12th std Tamil book புறநானூறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

9th New Book Erode tamizanban தமிழோவியம்

0 Comments

’தமிழோவியம்’ இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின்…

திராவிட மொழிக்குடும்பம்

3 Comments

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்ப்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். இந்தோ…

9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான் விழாவறை…