TNPSC ilakkanam

0 Comments

6th to 10th இலக்கணம்

நால்வகை குறுக்கங்கள்:

  • சில இடங்களில் சில எழுத்துக்கள் தமக்குரிய கால அளவைவிட குறைவாக ஒலிக்கும் இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களை குறுக்கங்கள் என்கிறோம்.

ஐகாரக்குறுக்கம்:

  • ஐ, கை, பை இவ்வாறு தனித்து வரும் இடங்களில் தனக்குரிய 2 மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
  • வையம் – ஐ காரம் சொல்லின் முதலில் வரும்போது 1 ½  மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • சமையல், பறவை – ஐ காரம் சொல்லின் இடையிலும், இறுதியிலும் வரும்போது 1 மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஒளகாரக் குறுக்கம்

  • ஒள, வெள, என ஒளகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய 2 மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
  • ஒளவையார், வெளவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது 1 ½  மாத்திரை அளவில் ஒலிக்கும்.

“ஒளகாரம் சொல்லின் இடையிலும், இறுதியிலும் வராது”

மகரகுறுக்கம்

  • வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்து அடுத்து வகர எழுத்து வருவதால் மகர மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை ½ அளவில் இருந்து குறைந்து கால் மாத்திரை ¼ அளவில் ஒலிக்கிறது.
  • போலும், என்னும் சொல்லை போன்ம் என்றும் 
  • மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செயுளில் ஓசைச்

சீர்மைக்காகப் பயன்படுத்தினர்.

  • இச்சொற்களில் மகரமெய்யானது ண், ன் ஆகிய எழுத்துக்களை அடுத்து வருவதால் தனது ½ மாத்திரை அளவிலிருந்து குறைந்து ¼ மாத்திரை அளவாக ஒலிக்கிறது.

ஆய்தக் குறுக்கம்:

  • முள் + தீது என்பது முஃடீது எனவும்,  கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். 

இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Hello world!

0 Comments

Welcome to WordPress. This is your first post. Edit or…

6th Std TNPSC Gr IV Notes part 1

0 Comments

6th std notes for group IV இன்பத்தமிழ் சொல்லும் பொருளும் நிருமித்த…

9th std TNPSC notes/ thanneer/group IV notes

0 Comments

தண்ணீர் கந்தர்வன் இயற்பெயர்: நாகலிங்கம் ஊர்:சிக்கல் (இராமநாதபுரம் மாவட்டம்) தமிழ்நாடு அரசின் கருவூலக்…