20 May, 2024
0 Comments
1 category
TNPSC group IV இலக்கணம்
அளபெடை
அளபெடை
- அளபெடுத்தல் – நீண்டு ஒலித்தல்
- செய்யுளில் ஓசை குறையும்போது. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் உள்ள நெட்டெழுத்துக்கள் தனது இரண்டு மாத்திரை அளவில் இருந்து நீண்டு ஒலிக்கும் அவ்வாறு ஒலிப்பது அளபெடை.
அளபு – மாத்திரை; எடை – எடுத்தல்
அளபெடை இரண்டு வகைப்படும்.
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
உயிரளபெடை:
- செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்வதற்காக உயிர் நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும்.
- அவ்வாறு அளவெடுக்கும் போது அவற்றுக்கு இனமான குறில் எழுத்துக்கள் குறியீடாக அதன் அருகில் வரும்.
- ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் வரும்.
- உயிரளபெடை மூன்று வகைப்படும்
- செய்யுளிசை அளபெடை (இசை நிறை அளபெடை)
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தல் செய்யுளிசை அளபெடை.
- இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.
ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
உறாஅர்க் குறுநோய் – மொழியிடை
நல்ல படாஅ பறை – மொழியிறுதி
இன்னிசை அளபெடை
- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டா ர்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
சொல்லிசை அளபெடை
- செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் வினையெச்ச பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்.
ஒற்றளபெடை
- செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண்,ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் ஒரு குறிலை அடுத்தும், இரு குறிலை அடுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
எங்ங் கிறைவன் எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்
Category: இலக்கணம்