6th std notes for group IV
இன்பத்தமிழ்
சொல்லும் பொருளும்
நிருமித்த – உருவாக்கிய
விளைவு – வளர்ச்சி
சமூகம் – மக்கள் குழு
அசதி – சோர்வு
பாரதிதாசன்
- இயற்பெயர்– சுப்புரத்தினம்
- சிறப்பு பெயர்:
- (அறிஞர் அண்ணா அவர்களின் முயற்சியால் ரூ. 25000 பொற்கிழியும் புரட்சிக் கவிஞர் என்ற விருதும் 1946-இல் பெற்றார். )
- புரட்சிக்கவி
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்க்கை கவிஞர்
- பெற்றோர் – கனகசபை- இலக்குமி அம்மையார்
- பிறந்த ஊர் – புதுச்சேரி
- காலம் -29.4.1891 – 21.4.1964
- நூல்கள் – குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, தமிழியக்கம், சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், சஞ்சீவி பருவத்தின் சாரல், குறிஞ்சித்திட்டு.
- இதழ்: குயில்
- சாகித்திய அகாதெமி விருது – பிசிராந்தையார் (நாடக நூல்)1969
- 1982-ல் இவரது பெயரில் திருச்சியில் “பாரதிதாசன் பல்கலைகழகத்தை” உருவாக்கியுள்ளது.
- புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே “
புதுச்சேரியின் மாநிலப் பாடல் ஆகும். இந்த பாடல் பாரதிதானால் எழுதப்பட்டது.
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
“எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நடக்கின்ற திந்தவையம்”
“புதியதோர் உலகம் செய்வோம்”
“தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை “
“இருட்டறையில் உள்ளதடா உலகம்”
பொருத்துக:
சமூகத்தின் விளைவுக்கு – நீர்
வாழ்வுக்கு – ஊர்
இளமைக்கு – பால்
புலவர்க்கு – வேல்
அசதிக்கு – தேன்
அறிவுக்கு – தோள்
கவிதைக்கு – வாள்
தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்ச ம் இனிக்கும் இனிக்கும்
– காசி ஆனந்தன்
தமிழ்க்கும்மி
பெருஞ்சித்திரனார்
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் -இராசமாணிக்கம் ( இவர் தனது தந்தை பெயரில் பாதியும், தனது பெயரில் பாதியும் இணைத்து துரை-மாணிக்கம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்)
- சிறப்புப் பெயர் – பாவலரேறு (பாவாணர் அவர்கள், 1973-இல் “பாவலரேறு‘) என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
- பிறந்த ஊர்: சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
- பெற்றோர்: துரைசாமி, குஞ்சம்மாள்
- நூல்கள் – கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி (பள்ளிப் பருவத்திலேயே “மல்லிகை”, பூக்காரி” என்னும் பாவியங்களை இயற்றினார், பாரதிதாசன் தம் அச்சகத்திலேயே “கொய்யாக்கனி” என்னும் பெயரில் பெருஞ்சித்திரனாரின் பாவியங்களை அச்சிட்டுத் தந்தார்)
பாவியக்கொத்து, நூறாசிரியம், பள்ளிபறவைகள், இளமை விடியல், உலகியல் நூறு, மகபுகு வஞ்சி, எண்சுவை எண்பது.
- இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை,
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
இதழ்கள்:
தென்மொழி, தமிழ்ச் சிட்டு, தமிழ் நிலம்
- பாவாணரின் விருப்பப்படி, தென்மொழி என்னும் இதழைப் பெருஞ்சித்திரனார் 1959 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார்.
- வேலூர் சிறையில் இருந்தபோது ”ஐயை” என்னும் தனித் தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.
- வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பின் “தமிழ்ச் சிட்டு” இதழைத் தொடங்கினார்.(1960)
- இறப்பு:1995 –ஆம் ஆண்டு, சூன் திங்கள் 11 ஆம் நாள்.62 ஆம் அகவையில் இறந்தார்
சொல்லும் பொருளும்
- ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை
- ஆழிப் பெருக்கு – கட ல் கோள்
- மேதினி – உலகம்