அளபெடை

0 Comments

TNPSC group IV இலக்கணம்

அளபெடை

அளபெடை

  • அளபெடுத்தல் – நீண்டு ஒலித்தல்
  • செய்யுளில் ஓசை குறையும்போது. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் உள்ள நெட்டெழுத்துக்கள் தனது இரண்டு மாத்திரை அளவில் இருந்து நீண்டு ஒலிக்கும் அவ்வாறு ஒலிப்பது அளபெடை. 

அளபு – மாத்திரை; எடை – எடுத்தல்

அளபெடை இரண்டு வகைப்படும். 

  1. உயிரளபெடை
  2. ஒற்றளபெடை

உயிரளபெடை:

  • செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்வதற்காக உயிர் நெடில் எழுத்துக்கள்  ஏழும் அளபெடுக்கும். 
  • அவ்வாறு அளவெடுக்கும் போது அவற்றுக்கு இனமான குறில் எழுத்துக்கள் குறியீடாக அதன் அருகில் வரும்.
  • ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் வரும்.
  • உயிரளபெடை மூன்று வகைப்படும்
  1. செய்யுளிசை அளபெடை (இசை நிறை அளபெடை)
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை

செய்யுளிசை அளபெடை

  • செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தல் செய்யுளிசை அளபெடை.
  • இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

            ஓஒதல் வேண்டும் – மொழி முதல்

            உறாஅர்க் குறுநோய் – மொழியிடை

             நல்ல படாஅ பறை – மொழியிறுதி

இன்னிசை அளபெடை

  • செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். 

கெடுப்பதூஉம் கெட்டா ர்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

சொல்லிசை அளபெடை

  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் வினையெச்ச பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும். 

             உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

             வரனசைஇ இன்னும் உளேன்.

ஒற்றளபெடை

  • செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண்,ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், என்னும் ஆய்த எழுத்தும் ஒரு குறிலை அடுத்தும், இரு குறிலை அடுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும். 

          எங்ங் கிறைவன்          எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

பொது தமிழ் இலக்கணம்

0 Comments

முதலெழுத்தும் சார்பெழுத்தும் முதலெழுத்தும் சார்பெழுத்தும்      முதலெழுத்து உயிர் எழுத்து 12 ம், மெய்யெழுத்து…