29 March, 2024
0 Comments
1 category
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம்
சொல்லும் பொருளும்
மா – வண்டு மது – தேன் வேரி – தேன் வாவி–பொய்கை. தரளம் – முத்து பணிலம் – சங்கு; சுரிவளை – சங்கு வளர் முதல் – நெற்பயிர் குழை – சிறு கிளை கா – சோலை மாடு – பக்கம் கோடு – குளக்கரை மேதி – எருமை கன்னி வாளை – இளமையான வாளைமீன் |
பகடு – எருமைக்கடா பாண்டில் – வட்டம் சிமயம் – மலையுச்சி நாளிகேரம் – தென்னை நரந்தம் – நாரத்தை கோளி – அரசமரம் சாலம் – ஆச்சா மரம் தமாலம் – பச்சிலை மரம் இரும்போந்து – பருத்த பனைமரம் சந்து – சந்தன மரம் நாகம் – நாகமரம் காஞ்சி – ஆற்றுப்பூவரசு. |
- பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும்
- முதல் காண்டத்தில் – ஐந்து சருக்கங்களையும், இரண்டாம்- காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது.
- 4286 பாடல்கள்
- ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் “பிள்ளை பாதி; புராணம் பாதி” என்கிற பழமொழி ஏற்பட்டது.
- பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார்
- ஊர்: குன்றத்தூர்
- இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
- இவர் அநபாயச்சோழனிடம் ( 2ஆம் குலோத்துங்கசோழன்) தலைமை அமைச்சராக இருந்தவர்
- காலம்: கி.பி 12 ஆம் நூற்றாண்டு
சிறப்பு:
- உத்தம சோழப் பல்லவன்
- தொண்டர் சீர் பரவுவார்
- தெய்வப்புலவர்
- தனியடியார் : 63
- தொகை அடியார் : 9
- மொத்தம் 72 பேர் சிவனடியார்
- அடியார்களின் வரலாற்றை கூறுவதால் பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் என்னும் பெயர் பெற்றது
- இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம்
- இதனை “திருத்தொண்டர்மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
- சைவசமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.
- “சைவஉலகின் விளக்கு” எனப்போற்றப்படுகிறது.
- “எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்
- தில்லை நடராஜ பெருமாள் ‘உலகெலாம்’ என அடி எடுத்துக் கொடுத்து பாடப் பெற்ற நூல் எனவும் கூறுவர்.
- பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிறப்பிக்கிறார்
உலகம், உயிர், கடவுள் இம்மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரிய புராணம் என்கிறார் தி.ரு. வி.க
- சுந்தரரின் திருத்தொண்டத்தொகை- அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது(முதல நூல்)
- நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி – ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது( வழி நூல்)
- சேக்கிழாரின் பெரியபுராணம் – ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு அடியாராக 63வரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது திருத்தொண்ட புராணம்
Tags: 9th std new and old book9th std new book with previous year question Periyapuranam Tnpsc Group IV tamil notes பெரியபுராணம்
Category: Tamil 9th new and old