PERIYAPURAANAM 9th new ad old book பெரியபுராணம்

0 Comments

காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம்

சொல்லும் பொருளும்

மா – வண்டு 
மது – தேன்
வேரி – தேன்
வாவி–பொய்கை.
தரளம் – முத்து
பணிலம் – சங்கு;
சுரிவளை – சங்கு
வளர் முதல் – நெற்பயிர்
குழை – சிறு கிளை
கா – சோலை
மாடு – பக்கம்
கோடு – குளக்கரை
மேதி – எருமை
கன்னி வாளை – இளமையான வாளைமீன்
பகடு – எருமைக்கடா
பாண்டில் – வட்டம்
சிமயம் – மலையுச்சி
நாளிகேரம் – தென்னை
நரந்தம் – நாரத்தை
கோளி – அரசமரம்
சாலம் – ஆச்சா மரம்
தமாலம் – பச்சிலை மரம்
இரும்போந்து – பருத்த பனைமரம் 
சந்து – சந்தன மரம்
நாகம் – நாகமரம்
 காஞ்சி – ஆற்றுப்பூவரசு.
  • பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும்
  • முதல் காண்டத்தில்  – ஐந்து சருக்கங்களையும், இரண்டாம்- காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது.
  • 4286 பாடல்கள்
  • ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் “பிள்ளை பாதி; புராணம் பாதி” என்கிற பழமொழி ஏற்பட்டது.
  • பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார்
  • ஊர்: குன்றத்தூர்
  • இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
  • இவர் அநபாயச்சோழனிடம் ( 2ஆம் குலோத்துங்கசோழன்) தலைமை அமைச்சராக இருந்தவர்
  • காலம்: கி.பி 12 ஆம் நூற்றாண்டு

சிறப்பு:

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்
  • தெய்வப்புலவர்
  • தனியடியார் : 63
  • தொகை அடியார் : 9
  • மொத்தம் 72 பேர் சிவனடியார்
  • அடியார்களின் வரலாற்றை கூறுவதால் பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் என்னும் பெயர் பெற்றது
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் 
  • இதனை “திருத்தொண்டர்மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
  • சைவசமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.
  • சைவஉலகின் விளக்கு” எனப்போற்றப்படுகிறது.
  • எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்
  • தில்லை நடராஜ பெருமாள் ‘உலகெலாம்’ என அடி எடுத்துக் கொடுத்து பாடப் பெற்ற நூல் எனவும் கூறுவர்.
  • பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிறப்பிக்கிறார்

உலகம், உயிர், கடவுள் இம்மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரிய புராணம் என்கிறார் தி.ரு. வி.க

  1. சுந்தரரின் திருத்தொண்டத்தொகை- அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது(முதல நூல்)
  2. நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி – ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது( வழி நூல்)
  3. சேக்கிழாரின் பெரியபுராணம் – ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு அடியாராக 63வரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது திருத்தொண்ட புராணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

திராவிட மொழிக்குடும்பம்

3 Comments

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்ப்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். இந்தோ…