முதலெழுத்தும் சார்பெழுத்தும்
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
முதலெழுத்து
- உயிர் எழுத்து 12 ம், மெய்யெழுத்து 18 ஆகிய 30 எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் ஆகும்.
சார்பெழுத்து
- முதல் எழுத்தை சார்ந்துவரும் எழுத்துக்கள் சார்பெழுத்து ஆகும்.
- 10 வகைப்படும்.
உயிர்மெய்:
- உயிர் மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். (க் + அ= க)
- வரி வடிவம் மெய் எழுத்தை ஒத்திருக்கும் (க)
- ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்
ஆய்தம்:
- முப்புள்ளி, முப்பாற்ப்புள்ளி, தனிநிலை என்ற பெயர்களும் இதற்கு உண்டு..
- தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.(அஃது) தனித்து இயங்காது
குற்றியலுகரம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை
- அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
- குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்
குற்றியலிகரம்:
- ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும் இகரம்
- குறுமை+இயல்+இகரம் = குற்றியலிகரம்
முற்றியலுகரம்:
- தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்
- வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்
- இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்
எ.கா: புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
குற்றியலுகரத்தின் வகைகள்:
வன்தொடர் குற்றியலுகரம்
:
வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம்
எ.கா: பாக்கு பேச்சு பாட்டு, உப்பு, பற்று
- மென்தொடர் குற்றியலுகரம்:
மெல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென் தொடர் குற்றியலுகரம்.
எ.கா: பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்:
இடையின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா: எய்து, மார்பு, சால்பு, மூழ்கி
- நெடில் தொடர் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும் .
இவை ஈரெழுத்து சொற்களாக மட்டும் அமையும் சொற்களாக மட்டும் அமையும்.
எ.கா: பாகு, மாசு பாடு காது ஆறு
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா: அரசு (ர = ர் + அ), கயிறு ( யி = ய்+ இ)
ஒன்பது ( ப = ப் + அ) , வரலாறு(லா= ல் + ஆ)
- ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆயுதத் தொடர் குற்றியலுகரம்
எ.கா: அஃது, எஃகு
குற்றியலிகரம் இரண்டு இடங்களின் மட்டும் வரும்:
இடம் 1:
- குற்றியலுகர சொற்களை தொடர்ந்து ய கரத்தை முதல் எழுத்தாக கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்,
- அது அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும்.
கொக்கு + யாது = கொக்கியாது
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
இடம் 2:
- மியா என்பது ஒரு அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது)
- இதில் மி யில் உள்ள இகரம் குற்றியலிகரம்
கேள்+ மியா = கேண்மியா
செல்+ மியா = சென்மியா