9th Std திராவிட மொழிக்குடும்பம் New and Old Book important notes

0 Comments

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்ப்பட்டது.

இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப்  பிரிக்கின்றனர்.

  1. இந்தோ – ஆசிய 
  2. ஆஸ்திரோ- ஆசிய
  3. சீன – திபெத்திய 
  4. திராவிட மொழிகள்

இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகqழ்கிறது என்று ச.அகத்தியலிங்கம்  குறிப்பிட்டுள்ளார்.

திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்

தமிழ் என்னும்  சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார்

தமிழ்——தமிழா—–தமிலா —–டிரமிலா—-ட்ரமிலா—-த்ராவிடா—–திராவிடா என்று கூறுகிறார்.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள் கருதினர்.

அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.

1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்ப ட்டன.

பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆய்ந்து இவற்றை தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார்.

மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று ஹோக்கன் பெயரிட்டார்

பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

1856 – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்

(திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து  வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.)

கால்டு வெல்லுக்குப் பின்னர் திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

  1. ஸ்டென்கனோ
  2. கே.வி. சுப்பையா
  3. எல்.வி.இராமசுவாமி
  4. பரோ
  5. எமினோ 
  6. கமில்சுவலபில்
  7. ஆந்திரனோவ்
  8. தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

திராவிட மொழிக்குடும்பம்

24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.

திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால்பாகுபாடு அமைந்துள்ளது.ஆண்பால் , பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.

அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால் காட்டும் விகுதிகள் இல்லை.

தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர். எ.கா. கடுவன் – மந்தி;

களிறு – பிடி

வடமொழியில் இவ்வாறு அமையவில்லை . உயிரற்ற பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும் கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன.

இம்மொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின் றன.

ஜெர்மன் மொழியிலும் இத்தகைய தன்மையைக் காணமுடிகிறது. முகத்தின் பகுதிகளான வாய், மூக்கு, கண் ஆகியவை வேறுவேறு பால்களாகச் சுட்டப்படு கின்றன. வாய்-ஆண்பால்,மூக்கு – பெண்பால்,கண் – பொதுப்பால்

மலையாள மொழியில் மட்டுமே திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை. (பாலறி கிளவிகள்) தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்.

ஆங்கிலம் போனற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன

மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது

One Reply to “9th Std திராவிட மொழிக்குடும்பம் New and Old Book important notes”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

TNPSC ilakkanam

0 Comments

6th to 10th இலக்கணம் நால்வகை குறுக்கங்கள்: சில இடங்களில் சில எழுத்துக்கள்…

6th std TNPSC part 1

0 Comments

6th-Std-இலக்கியம்-part-1-1Download tnpsc 6th std notes